9 நாட்கள் நடைபெறும் நவராத்திரி விழா - களைகட்டிய கொலு பொம்மை விற்பனை - சிறப்பு கட்டுரை!
Mar 15, 2026, 06:34 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

9 நாட்கள் நடைபெறும் நவராத்திரி விழா – களைகட்டிய கொலு பொம்மை விற்பனை – சிறப்பு கட்டுரை!

Murugesan M by Murugesan M
Oct 2, 2024, 09:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வாழ்க்கையின் தத்துவத்தைப் படிப்படியாக விளக்கும் கொலு பொம்மைகளை வைத்து வழிபடும் நவராத்திரி விழா அக்டோபர் 3ஆம் தேதி  தொடங்கி 9 நாட்கள் நடைபெறவுள்ள நிலையில் கொலு பொம்மைகளின் விற்பனை களைகட்டியுள்ளது. அது குறித்து ஒரு செய்தி தொகுப்பு………

தமிழ் வருடத்தின் 12 மாதமும் பிரசித்தி பெற்ற மகத்துவம் நிறைந்த மகத்தான மாதங்கள்தான். அதில் புரட்டாசி மாதத்தில் வீடுகளில் வைக்கப்படும் கொலு வழிபாடு கூடுதல் பிரசித்தி பெற்றதாகும்.

நவராத்திரியை கொலு பண்டிகை என்று அழைப்பது இப்பண்டிகைக்கே உள்ள தனிச் சிறப்பு. உலக உயிர்கள் அனைத்தும் தங்களைத் தெய்வ நிலைக்கு உயர்த்திக்கொள்ளப் பாடுபட வேண்டும் என்பதே கொலுவின் தத்துவமாகும்.

வீட்டில் ஒரு அறையைத் தேர்ந்தெடுத்து அந்த அறையைச் தூய்மைப்படுத்தி மூன்று அல்லது ஐந்து அல்லது ஏழு அல்லது ஒன்பது படிகளை வசதிக்கும், இடத்திற்கும் ஏற்றபடி உருவாக்கி கொலுவானது அமைக்கப்படுகிறது.

முதல் படியின் நடுவில் கலசத்தை வைத்து பச்சரிசியை நிரப்பி, ஐந்து மாவிலைகளை வட்டமாக அடுக்கி, மஞ்சள், குங்குமம் பூசிய தேங்காயை அதில் பொருத்துகின்றனர். அப்போது முதல், நவராத்திரி வழிபாடும், கொலு வழிபாடும் தொடங்குகின்றன. கொலு வைக்கப்பட்டுள்ள அறையின் ஒரு பகுதியில் நவதானியங்களை விதைக்கின்றனர். அவை செழித்து வளர்ந்தால், குடும்பமும் செழிப்புடன் விளங்கும் என்பதே நம்பிக்கையாக உள்ளது.

வாழ்க்கையின் தத்துவத்தைப் படிப்படியாக விளக்கும் நவராத்திரியானது நாளை தொடங்கி 9 நாட்கள் நடைபெறவுள்ளன.

வீடுகள் தோறும் இந்த நவராத்திரி கொண்டாட்டத்திற்கான கொலு பொம்மை விற்பனை நாடு முழுவதும் களை கட்டியுள்ளது. அந்த வகையில், சென்னையில் குறலகம், அண்ணாசாலை பூம்புகார் கைத்திறத் தொழில்கள் வளர்ச்சி கழகம் , காதி கிராப்ட் உள்ளிட்ட விற்பனை மையங்களில் கொலு பொம்மைகளின் கண்காட்சி மற்றும் விற்பனை களைகட்டியுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரியின் போது புது, புது பொம்மைகள் விற்பனைக்கு வருவதாகவும், அதை வாங்குவோர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், தெரிவிக்கும் விற்பனையாளர்கள், சுமாா் 7 அடி வரையிலான உயரம் கொண்ட பொம்மைகளையும் வாங்கிச் செல்வதாக தெரிவித்துள்ளனர்.

கொலு வைப்பதற்காக தங்களின் வசதிக்கேற்ப பொம்மைகளை ஆர்வமுடன் வாங்கிச் செல்லும் பெண்கள், இதனால் தங்களின் வாழ்வில் வளம் பெறுவதாக தெரிவிக்கின்றனர்.

வாழ்க்கையின் தத்துவத்தைப் படிப்படியாக விளக்கும் கொலு பொம்மைகளை வைத்து வழிபட்டு நவராத்திரி விழாவை சிறப்பாக கொண்டாடுவோம்…

Tags: Navratri FestivalKolu dolls salesChennaitamilnadu
ShareTweetSendShare
Previous Post

நாமக்கல் அருகே ஏடிஎம் கொள்ளையர்களை பிடித்த போலீசார் – டிஜிபி சங்கர் ஜிவால் நேரில் பாராட்டு!

Next Post

IIT சேர்க்கை விவகாரம் : பட்டியலின மாணவருக்கு கை கொடுத்த உச்ச நீதிமன்றம் – சிறப்பு கட்டுரை!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies