டெல்லியில் 2 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான கொகைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தெற்கு டெல்லியில் உள்ள பகுதியில் தடைசெய்யப்பட்ட போதைப்பொருள் கடத்தப்படுவதாக தகவல் கிடைத்தது.
இதையடுத்து அங்கு சோதனை மேற்கொண்ட காவல் துறையினர், தடை செய்யப்பட்ட 560 கிலோ கொகைன் போதைப்பொருளை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு 2 ஆயிரம் கோடி என கூறப்படுகிறது. மேலும், கடத்தலில் ஈடுபட்ட 4 பேரையும் கைது செய்தனர்.