சென்னை, அண்ணாசாலையில் உள்ள காதிபவனை பார்வையிட்டு மத்திய அமைச்சர் எல்.முருகன் பொருட்களை வாங்கினார்.
தீபாவளி பண்டிகையையொட்டி அண்ணா சாலையில் உள்ள காதிபவனில் தள்ளுபடி விலையில் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில் மகாத்மா காந்தியின் 156 ஆவது பிறந்தநாளையொட்டி காதிபவன் கடைக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் சென்றனர்.
அப்போது தள்ளுபடி விலை குறித்த விவரங்கள் மற்றும் விற்பனை விவரங்களை கேட்டறிந்தார். மேலும் கதர் சட்டை துணி, கதர் வேட்டி , கதர் துண்டுகள் ஆகியவற்றையும் வாங்கி சென்றார்.