நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், அனைவருக்கும் “மங்களகரமான நவராத்திரி பண்டிகை வாழ்த்துக்கள். நவராத்திரியின் முதல் நாளில், ஷைலபுத்ரியை பிரார்த்திக்கிறேன்! அவர் அருளால் அனைவரும் ஆசீர்வதிக்கப்படட்டும். உங்கள் அனைவருக்காக நான் தேவியிடம் பிரார்த்தனை செய்கிறேன் என மோடி கூறியுள்ளார்.
உள்துறை அமைச்சர் அமித் ஷா விடுத்துள்ள பதிவில், நவராத்திரியின் புனிதத் திருநாளில் நாட்டு மக்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள்.
நவராத்திரி என்பது சக்தி வழிபாடு, ஆன்மிக ஆற்றல் திரட்சி மற்றும் பிரபஞ்சத்தின் தாயான மா அம்பேவின் ஒன்பது வடிவங்களை வழிபடும் ஒரு சிறந்த திருவிழா ஆகும். நலம் பெற மா துர்காவை பிரார்த்திக்கிறேன். , முழு உலகத்தின் மகிழ்ச்சி மற்றும் அமைதி நிலவட்டும் என அமித் ஷா தெரிவித்துள்ளார்.