மரப்பாலத்தில் ஆற்றை கடக்கும் மலை கிராம மக்கள் - புதிய பாலம் அமைக்கப்படுமா? சிறப்பு கட்டுரை!
Nov 9, 2025, 02:28 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மரப்பாலத்தில் ஆற்றை கடக்கும் மலை கிராம மக்கள் – புதிய பாலம் அமைக்கப்படுமா? சிறப்பு கட்டுரை!

Web Desk by Web Desk
Oct 4, 2024, 08:00 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நெல்லை மாவட்டத்தில் மலை கிராம மக்கள் தாமிரபரணி ஆற்றை கடக்க 40 ஆண்டுகளுக்கும் மேலாக மரப்பாலத்தை பயன்படுத்தி வருகின்றனர். இந்த மரப்பாலத்திற்கு பதிலாக கான்கிரீட் பாலம் அமைத்து தர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இது குறித்த செய்தி தொகுப்பை பார்க்கலாம்..

திருநெல்வேலி மாவட்டத்தின் இயற்கை எழில் கொஞ்சும் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ளது சின்ன மயிலாறு கிராமம். பாபநாசம் அணையின் அடிவாரத்தில் தாமிரபரணி ஆற்றின் கரையில் இக்கிராமம் அமைந்துள்ளது. இங்கு காணி பழங்குடியினத்தை சேர்ந்த மக்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர்.

சின்ன மயிலாறு கிராமத்தை சேர்ந்த மக்கள், மலைப்பகுதியில் இருந்து வெளியிடங்களுக்கு செல்லும் வழியில் தாமிரபரணி ஆறு பாய்ந்தோடுகிறது. இந்த
ஆற்றை கடந்து செல்ல முறையான பாலங்கள் எதுவும் இதுவரை அமைத்து தரப்படவில்லை. சாதாரண மரப்பாலம் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது. இந்த மரப்பாலமும் கூட அமைக்கப்பட்டு 40 ஆண்டுகள் கடந்து விட்டது.

கடுமையான மழை, சூறைக்காற்று, வெள்ளப்பெருக்கு போன்ற இயற்கை சீற்றங்களின்போதும், இந்த மரப்பாலத்தை பயன்படுத்திதான் சின்ன மயிலாறு கிராம மக்கள் ஆற்றை கடந்து வருகின்றனர். ஆனால், மரப்பாலம் 40 ஆண்டுகளை கடந்து விட்டதால் தற்போது மிகவும் பலவீனமடைந்துள்ளது. இனியும் இந்த மாரப்பாலத்தை பயன்படுத்துவது பாதுகாப்பாக இருக்காது என அப்பகுதி மக்கள் கருதுகின்றனர்.

சின்ன மயிலாறு கிராம மக்கள் வெளியிடங்களுக்கு செல்ல ஏதுவாக ஆற்றின் குறுக்கே கான்கிரீட் பாலம் அமைக்க, சில ஆண்டுகளுக்கு முன்பு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், இதுவரை அதற்கான எந்த பணிகளும் தொடங்கப்படவில்லை. எனவே, இனியும் தாமதிக்காமல் ஆற்றின் குறுக்கே, கான்கிரிட் பாலம் அமைத்து தர வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

மழைக்காலம் தொடங்குவதற்குள் கான்கிரீட் பாலத்தை அமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுக்கும் மலைக் கிராம மக்கள், பள்ளி மாணவர்கள், முதியவர்கள், நோயாளிகள் உள்ளிட்டோர் அச்சமின்றி ஆற்றை கடக்க கான்கிரீட் பாலம் உதவியாக இருக்கும் எனவும் தெரிவிக்கின்றனர்…..

Tags: Mylaru villageNellaitamiraparani riverwooden bridge to cross river
ShareTweetSendShare
Previous Post

ஈரான் Vs இஸ்ரேல் போர் மூன்றாம் உலகப்போர் தொடக்கம்? சிறப்பு கட்டுரை!

Next Post

ஈரான், இஸ்ரேல் போர் பதற்றம் – அமைச்சர்களுடன் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை!

Related News

மரணத்திற்கு பின் இரத்த ஓட்டம் – டெல்லி மருத்துவர்கள் சாதனை!

கரூரில் முறையான வழிகாட்டல் இல்லாமல் நடந்த மாரத்தான் போட்டி – போக்குவரத்து பாதிப்பு!

நாமக்கல் : சுற்றித் திரியும் தெரு நாய்களால் வாழ்வாதாரம் பாதிப்பு – தொழிலாளர்கள் வேதனை!

நார்வேயில் ‘ஆட்டோ ஸ்டீரிட் பார்பர்’ முடிவெட்டும் இயந்திரம் அறிமுகம்!

மதுரையில் உள்ள மத்திய அரசின் ஆதார் சேவை மையத்தில் குவிந்த கூட்டம்!

திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்த முகேஷ் அம்பானி!

Load More

அண்மைச் செய்திகள்

பராசக்தி படத்தின் அடி அலையே பாடலின் டான்ஸ் ரிகர்சல் வீடியோ வைரல்!

சித்தார்த்தின் ‘Rowdy And Co’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

ஹெலனிக் சாம்பியன்ஷிப் போட்டி – முசெட்டியை வீழ்த்தி ஜோகோவிச் சாம்பியன்!

நடிகை கெளரி கிஷன் விவகாரம் – யூடியூபருக்கு நடிகர் ரகுமான் கண்டனம்!

டென்மார்க் : 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை!

இந்திய பெருங்கடல் பாரதத்தின் சக்தியை மேலும் வலுப்படுத்துகிறது – முப்படை தலைமை தளபதி அனில் சவுகான்!

நாகேந்திரன் மருத்துவமனையில் இறந்ததாக கூறுவது முற்றிலும் பொய் – ஆம்ஸ்ட்ராங் சகோதரர் பகீர்!

பிலிப்பைன்ஸ் : ஃபங்-வாங் புயல் காரணமாக 10 லட்சம் பேர் இடம்பெயர்வு!

காசிமேடு : வாரவிடுமுறையை ஒட்டி அலைமோதிய மீன் பிரியர்களின் கூட்டம்!

கனடாவிடம் மன்னிப்பு கோரிய இளவரசர் ஹாரி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies