திருமாவளவன் இந்த அளவுக்கு தரம் தாழ்ந்து பேசுவார் என நினைத்துக்கூட பார்த்ததில்லை என தமிழக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை செம்மஞ்சேரியில் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டி அளித்தார், அப்போது, திமுக கூட்டணியில் இருந்த திருமாவளவனுக்கு திடீரென்று மது ஒழிப்பு கொள்கையை முன்னெடுப்பது ஆச்சரியமாக உள்ளது எனவும்தன் கட்சியை சார்ந்த ஒருவரே பேச வைத்து விட்டு அதிக சீட்டுக்காக இந்த மாநாட்டை நடத்துகிறார் எனவும் குற்றம்சாட்டினார்.
காந்திய கொள்கை மீது முரண்பாடாக இருக்கும் திருமாவளவன் மது ஒழிப்பை பற்றி பேசுவது எப்படி சரியாகும் என்றும், அரசியல் வாழ்வில் இதுவரை தனி நபர் தாக்குதல் தான் நடத்தவில்லை என்று கூறினார்.
திருமாவளவன் இவ்வளவு தரம் தாழ்ந்து பேசுவார் என நான் நினைத்துக் கூட பார்த்ததில்லை. மேலும் பாட்டிலை திறக்கிறார் என்று நான் சொல்லவில்லை
என்றும் அவர் கூறினார்.
அண்ணன் திருமாவளவன் இந்த பேச்சு அரசியல் வாழ்க்கையில் கரும்புள்ளி என்றும்
தமிழிசை தெரிவித்தார்.