திருப்பூர் குமரன் தியாகங்களை எண்ணி போற்றி வணங்குவோம் என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட தியாகி திருப்பூர் குமரன் அவர்களது பிறந்த தினம் இன்று. ஆங்கிலேயர்களுக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டிருந்த போது, உயிருள்ளவரை கையிலிருந்த தேசிய கொடியை தரையில் வீழாது, உயர்த்திப்பிடித்து, தமிழ் மண்ணிற்கு பெருமை சேர்த்த தியாகி திருப்பூர் குமரன் பிறந்த தினத்தில் அவர்தம் தியாகங்களை எண்ணி போற்றி வணங்குவோம் என தெரிவித்துள்ளார்.
இதனிடையே ராஜ்பவனில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை எல்.முருகன் மரியாதை நிமித்தமாக நேற்று சந்தித்து பேசினார்.