பாடகி சுசீலாவுக்கும், கவிஞர் மு.மேத்தாவுக்கும் கலைத்துறை வித்தகர் விருதை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்.
கலைத்துறையில் சிறந்து விளங்கும் நபர்களை போற்றும் வகையில் தமிழ்நாடு அரசு சார்பில் அவர்களுக்கு கலைத்துறை வித்தகர் வழங்கப்படுகிறது.
இந்நிலையில் 2023ம் ஆண்டுக்கான கலைத்துறை வித்தகர் விருதை பின்னணி பாடகி பி.சுசீலாவிற்கும், கவிஞர் மு.மேத்தாவுக்கும் வழங்க தமிழ்நாடு அரசு முடிவு செய்தது.
அதன்படி, சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிக்ழ்ச்சியில் சுசீலாவுக்கும், மு.மேத்தாவுக்கும் கலைத்துறை வித்தகர் விருதை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்.