இரு மாநிலத்திற்கு ஆளுநராக இருந்து தமிழ் சமூகத்திற்கு பெருமை சேர்த்த தமிழிசை சௌந்தரராஜனை விமர்சித்த திருமாவளவன் தமிழக பெண்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜக மாநில செயலாளர் அஸ்வத்தாமன் வலியுறுத்தியுள்ளார்.
திராவிடர் கழகம் கூட்டத்தில், ஆர்எஸ்எஸ் அமைப்பு குறித்து அவதூறு கருத்துகளை தெரிவித்த திராவிடர் கழகத்தை சேர்ந்த பெண் நிர்வாகி மதுவதனி மீது சென்னை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் மனுவை அஸ்வத்தாமன் அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், திராவிடர் கழகத்தை சேர்ந்தவர்கள் உண்மைக்கு புறம்பாக பேசுவதில் வல்லவர்கள் என விமர்சித்தார். பெரியாரே மதுவுக்கு ஆதரவாகவும், மதுவிலக்கிற்கு எதிரான கொள்கையை உடையவர் என்றும் அஸ்வத்தாமன் தெரிவித்தார்.
பெண் என்ற காரணத்தினாலேயே தமிழிசை சௌந்தரராஜனை, விசிக தலைவர் திருமாவளவன் தரக்குறைவாக பேசியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.