பிரதமர் மோடி இன்று மகாராஷ்டிரா செல்லும் நிலையில் 56 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளார்.
வாஷிமில், பஞ்சாரா விராசத் அருங்காட்சியகத்தை திறந்து வைக்கும் பிரதமர் மோடி, விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்புத் துறை தொடர்பான 23 ஆயிரத்து 300 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார்.
தொடர்ந்து தானேயில் 32 ஆயிரத்து 800 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். மேலும் பாந்த்ரா குர்லா காம்ப்ளக்ஸ் – ஆரே இடையே 14 ஆயிரத்து 120 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் மோடி கொடியசைத்துத் தொடங்கிவைத்து, ரயிலில் பயணம் செய்ய உள்ளார்.