ஜெய்சங்கர் பயணம் எதிரொலி - இலங்கைக்கு கூடுதல் சலுகை - சிறப்பு கட்டுரை!
Aug 19, 2025, 01:28 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஜெய்சங்கர் பயணம் எதிரொலி – இலங்கைக்கு கூடுதல் சலுகை – சிறப்பு கட்டுரை!

Web Desk by Web Desk
Oct 9, 2024, 08:00 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இலங்கைக்கு வழங்கப்பட்ட 20 மில்லியன் டாலர் மதிப்புள்ள கடன்களை மானியமாக மாற்றவும், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள காங்கேசன் துறைமுகத்தை 61.5 மில்லியன் டாலருக்கு நவீனமயமாக்கவும் இந்தியா முன்வந்துள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

அண்மையில் நடைபெற்ற இலங்கை அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி கட்சி வெற்றி பெற்றது. அக்கட்சியின் தலைவரான அநுரகுமார திஸ்நாயக இலங்கை அதிபராக கடந்த மாதம் 23 ஆம் தேதி பொறுப்பேற்றார். இந்நிலையில், அநுரகுமார திஸ்நாயக இலங்கை அதிபராக பதவியேற்ற, 15 நாட்களுக்குள் முதல் வெளிநாட்டு பிரமுகராக, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், அவரைச் சந்தித்துள்ளார். இருதரப்பு உறவை மேம்படுத்துவதை மையமாக கொண்ட பேச்சுவார்த்தைகள் குறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தமது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும், மீன்பிடி, பாதுகாப்பு, சுற்றுலா, எரிசக்தி உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருடன் கலந்துரையாடியதாக இலங்கை அதிபரும் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

காங்கேசன் துறைமுகத்தை நவீனமயமாக்கும் வகையில் 61.5 மில்லியன் அமெரிக்க டாலர் மானியம் வழங்க இந்தியா முன்வந்துள்ளது என்றும், ஏற்கெனவே இலங்கைக்குக் கொடுக்கப்பட்ட 20 மில்லியன் டாலர் மதிப்புள்ள 7 கடன்களை மானியமாக மாற்ற இருப்பதாகவும் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். மேலும், இலங்கை ரயில்வே துறைக்கு 22 டீசல் இன்ஜின்களைப் பரிசாக கொடுக்கவும் இந்தியா முடிவு செய்திருப்பதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சக செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் காரைக்கால் துறைமுகத்தில் இருந்து சுமார் 104 கிலோமீட்டர் தொலைவில் உள்ள காங்கேசன் துறைமுகம், சுனாமியாலும், ‘நிஷா’ சூறாவளியாலும் கடுமையாக சேதமடைந்தது.

காங்கேசன் துறைமுகத்தை புனரமைப்பதற்கான ஒப்பந்தத்தில் இந்தியாவும் இலங்கையும் கையெழுத்திட்டுள்ளன. நீண்ட காலமாகவே, இலங்கை துறைமுகங்களை சீன ஆராய்ச்சிக் கப்பல்கள் பயன்படுத்தி வருகின்றன. இது தொடர்பாக, இந்தியா, இலங்கையிடம் கேள்வி எழுப்பியது. இதன் விளைவாக, முந்தைய ரணில் விக்கிரமசிங்கே அரசு, நாட்டின் துறைமுகங்களை அனைத்து நாடுகளின் ஆராய்ச்சிக் கப்பல்கள் பயன்படுத்துவதற்கு ஓராண்டு தடை விதித்தது. இந்த தடை, வரும் டிசம்பர் மாதத்துடன் முடிவடைகிறது.

​தேசிய பாதுகாப்பு குறித்து பேசிய மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட, தமிழக மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்குமாறு வலியுறுத்தி உள்ளார். அதே நேரத்தில், 50 தமிழக மீனவர்கள் உடனடியாக விடுவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், எரிசக்தி உற்பத்தி மற்றும் பரிமாற்றம், எரிபொருள் மற்றும் எல்என்ஜி விநியோகம், சூரிய மின்மயமாக்கல் மற்றும் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு ஆகிய துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையே மேம்பட்ட ஒத்துழைப்பை ஏற்படுத்த முடிவு செய்திருக்கிறது. இலங்கையின் பொருளாதார மறுசீரமைப்பிற்கு இந்தியா தொடர்ந்து தனது ஆதரவினை அளித்து வரும் நிலையில், இலங்கை அதிபருடனான ஜெய்சங்கரின் சந்திப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

Tags: Indiasrilankaforeign minister s jaishankarjaishakar srilanka visit
ShareTweetSendShare
Previous Post

மோதிப்பார்…நாங்க ரெடி…ஏவுகணைகளை சிதறடிக்கும் இந்தியாவின் “அயர்ன் டோம்” – சிறப்பு கட்டுரை!

Next Post

ஹரியானாவில் 3-வது முறையாக ஆட்சியை கைப்பற்றியது பாஜக – பிரதமர் மோடி வாழ்த்து!

Related News

உலகிலேயே சிறந்த நாடாக இந்தியா விளங்குகிறது : அமெரிக்காவைச் சேர்ந்த இன்ஸ்டாகிராம் பிரபலம்!

சோம்நாத் கோயிலில் முதலமைச்சர் பூபேந்திர படேல் சுவாமி தரிசனம்!

ஓமன் : புழுதி புயலால் மக்கள் மிகுந்த சிரமம்!

கர்நாடகா : ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்ட சிறுமி பலி!

குடியரசு துணை தலைவர் தேர்தல் – எதிர்கட்சி வேட்பாளர் அறிவிப்பு!

ஜெலன்ஸ்கி, ஐரோப்பிய தலைவர்களுடன் சந்திப்பு : புதினிடம் எடுத்துரைத்த அமெரிக்க அதிபர் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பாகிஸ்தான் ட்ரோன்களை சுட்டு வீழ்த்திய சிவகங்கை ராணுவ வீரருக்கு தங்கப் பதக்கம்!

ஜிஎஸ்டி சீர்திருத்த திட்டங்கள் – மாநில அமைச்சர்கள் குழுவிடம் நாளை ஆலோசனை நடத்துகிறார் நிர்மலா சீதாராமன்!

கிருஷ்ணகிரி : ஆம்னி பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து – பலர் காயம்!

ஆசிய கோப்பை தொடருக்கான ப்ரோமோ வெளியீடு!

தொடர் வானிலை சீற்றங்களால் உருக்குலைந்த இமாச்சல் : சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் கூறும் அதிர்ச்சி பின்னணி!

பூமியை நெருங்கும் வேற்று கிரக விண்கலம் : ஹார்வர்டு விஞ்ஞானிகள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

மாரத்தானில் அசத்தல் : பதக்கங்களை குவித்து சாதிக்கும் இரட்டையர்கள்!

சென்னை பல்லவன் இல்லத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட போக்குவரத்து தொழிலாளர்கள் கைது!

இந்திய வம்சாவளி கூரியர் மேனுக்கு ஆஸ்திரேலிய பெண் பாராட்டு – ஏன் தெரியுமா?

ஜம்மு-காஷ்மீரில் உள்ளூர் மக்களுடன் கிரிக்கெட் விளையாடிய ராணுவ அதிகாரி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies