உள்ளாட்சிகளில் சமூகநீதியை நிலைநிறுத்த முடியாத திமுகவுக்கு சமூகநீதி குறித்து பேசுவதற்கு தகுதி இல்லை என பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், நெல்லை மாவட்டம், பாப்பாக்குடி ஊராட்சி தலைவராக பணியாற்றி வந்த பட்டியல் சமூகத்தை சேர்ந்த பூங்கோதை என்பவர் திமுக நிர்வாகியின் சாதிய அடக்குமுறை காரணமாக பதவி விலகியுள்ள சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது என தெரிவித்துள்ளார்.
பூங்கோதைக்கு திமுக நிர்வாகியால் இழைக்கப்படும் சாதிய அடக்குமுறைகள் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் எம்.பி கனிமொழி ஆகியோரிடம் முறையீடு செய்தும் பயனில்லை என பூங்கோதையின் கணவர் தெரிவித்ததை அன்புமணி சுட்டிகாட்டியுள்ளார்.
திமுக ஒன்றிய தலைவருக்கு, அதே கட்சியைச் சேர்ந்த நிர்வாகியால் இழைக்கப்படும் சமூக அநீதியை சரி செய்ய முடியாத திமுக, ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்கும் எவ்வாறு சமூகநீதி வழங்கப் போகிறது? எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், தமிழ்நாட்டில் பெரும்பான்மையான உள்ளாட்சிகளில் பட்டியல் சமூகத்தினருக்கு உண்மையான அதிகாரம் வழங்கப்படவில்லை என தெரிவித்த அவர்
உள்ளாட்சிகளில் சமூகநீதியை நிலைநிறுத்த முடியாத திமுகவுக்கு சமூகநீதி குறித்து பேசுவதற்கு எந்தத் தகுதியும் இல்லை.என தெரிவித்தார்.