ஹரியானாவில் பாஜக ஹாட்ரிக் வெற்றி - சாத்தியமானது எப்படி? சிறப்பு கட்டுரை!
Oct 7, 2025, 07:06 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஹரியானாவில் பாஜக ஹாட்ரிக் வெற்றி – சாத்தியமானது எப்படி? சிறப்பு கட்டுரை!

Web Desk by Web Desk
Oct 10, 2024, 08:00 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கருத்து கணிப்புகளை பொய்யாக்கி ஹரியானாவில் பாஜக ஹாட்ரிக் வெற்றி பெற்றுள்ளது. பாஜகவின் இந்த வெற்றிக்கு என்ன காரணம் என்பது குறித்த செய்தி தொகுப்பை தற்போது காணலாம்.

ஹரியானா மாநிலத்தில் எந்த கட்சியும் தொடர்ந்து 3 முறை ஆட்சி கட்டிலில் அமர்ந்தது இல்லை என்பது வரலாறு. ஆனால், அந்த வரலாற்றை தற்போது மாற்றி அமைத்துள்ளது பாஜக.

“ஹரியானாவில் தொடர்ந்து 10 ஆண்டுகளாக பாஜக ஆட்சி நடைபெற்று வருவதால், அரசு மீது நிச்சயமாக மக்களுக்கு அதிருப்தி ஏற்பட்டிருக்கும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கருதின. மேலும், நாட்டையே ஸ்தம்பிக்க வைத்த விவசாயிகள் ஆர்ப்பாட்டம், மல்யுத்த வீரர்களின் போராட்டம் உள்ளிட்டவையும் பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்றும்” என பலரும் ஆருடம் கூறி வந்தனர்.

தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளும் இதற்கு விதிவிலக்காக அமையவில்லை. ஆனால், இத்தகைய ஆருடங்களையும், கருத்து கணிப்புகளையும் அடித்து நொறுக்கியுள்ளது ஹரியானா மக்களின் ஜனநாயகத் தீர்ப்பு.

ஹரியானாவில் பாஜக வெற்றிப்பெறுவதற்கான முக்கிய காரணம், காங்கிரஸ்தான். சட்டப்பேரவை தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறப்போகிறோம் என்பதில் காங்கிரஸ் கட்சியினருக்கு அதீத நம்பிக்கை இருந்தது. இதன் காரணமாக, தேர்தலுக்கு முன்பாகவே யார் முதலமைச்சர் என்பது குறித்து காங்கிரஸ் கட்சியில் கோஷ்டி பூசல் எழத் தொடங்கியது.

அக்கட்சியின் மூத்த தலைவர்களான பூபிந்தர் சிங் ஹூடாவும், குமாரி செல்ஜாவும் தாங்கள்தான் முதலமைச்சராக வேண்டும் என கூறி கோஷ்டி பூசலில் ஈடுபட தொடங்கினர். ஒருகட்டத்தில் காங்கிரஸ் கட்சியையே இரண்டாக பிளவுப்படும் சூழலும் ஏற்பட்டது.

பாஜகவுக்கு எதிராக சண்டை செய்வதை விடுத்து, தங்களுக்குள்ளேயே காங்கிரஸ் தலைவர்கள் சண்டை செய்து கொண்டிருந்ததால், காங்கிரஸ் கட்சி தற்போது தோல்வியை தழுவியுள்ளது.

ஹரியானாவில் ஜாட் சமூகத்தினர் சுமார் 22 சதவீதம் பேர் உள்ளனர். அவர்களின் வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் பெற்றாலே வெற்றியை உறுதிசெய்து விடலாம் என காங்கிரஸ் எண்ணியது. ஜாட் சமூகத்தை சேர்ந்த பூபிந்தர் சிங் ஹூடா அந்த வாக்குகளை காங்கிரசுக்கு பெற்றுத் தருவார் எனவும் கருதப்பட்டது.

ஆனால், காங்கிரஸ் வெற்றி பெற்றாலும் பூபிந்தர் சிங் ஹூடா முதலமைச்சராக்கப்படுவரா என்ற கேள்வி எழுந்ததால், ஜாட் சமூக வாக்குகள் சிதறியதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

காங்கிரஸ் கட்சி ஆம் ஆத்மியுடன் கூட்டணி அமைக்காததும், பாஜகவுக்கு சாதமாக அமைந்தது. தொகுதி பங்கீட்டில் உடன்பாடு ஏற்படாததால் ஆம் ஆத்மியை காங்கிரஸ் கட்சி தனது கூட்டணியில் இணைத்துக் கொள்ளவில்லை. தேர்தல் முடிவில் பல தொகுதிகளில் சில ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் தோல்வியடைந்துள்ளது. ஆம் ஆத்மியின் உதவி இருந்திருந்தால், அந்த தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு அதிகரித்திருக்கும்.

ஆத்ஆத்மி மட்டுமல்லாமல், பல தொகுதிகளில் சுயேட்சை வேட்பாளர்களும் காங்கிரசின் வாக்குகளை பிரித்துள்ளதை தேர்தல் முடிவு காட்டுகிறது.

மறுபுறம், காங்கிரசை போல கோஷ்டி பூசலில் ஈடுபடாமல் பாஜக ஒற்றுமையுடன் சட்டப்பேரவை தேர்தலை சந்தித்தது. பாஜகவின் முதலமைச்சர் வேட்பாளராக நாயப் சிங் சைனி முன்னிறுத்தப்பட்டார்.  மாநிலம் முழுவதும் பாஜக அமைச்சர்கள் முகாமிட்டு தேர்தல் பணிகளை மேற்கொண்டனர்.

ஜாட் சமூகத்தின் வாக்குகளை மட்டும் குறிவைக்காமல், அனைத்து சமூதாய மக்களின் வாக்குகளையும் பெற பாஜக முயற்சித்தது. இதன் பலனாக பல இடங்களில் பட்டியல் சமூக மக்களின் வாக்குகளையும்கூட பாஜக தனதாக்கியுள்ளது. குறிப்பாக, மொத்தம் உள்ள 17 தொகுதிகளில் 8 தொகுதிகளில் பாஜக வெற்றிப்பெற்றுள்ளது.

இப்படி, பாஜகவின் ஒற்றுமை, பாஜக தலைவர்களின் களப்பளி, காங்கிரசின் கோஷ்டி சண்டை, காங்கிரசின் தவறான தேர்தல் வியூகம் உள்ளிட்டவை ஹரியானாவில் பாஜகவுக்கு மகத்தான வெற்றியை பெற்று தந்துள்ளது.

Tags: BJP hat-trick victoryopinion pollsbjpCongressHaryana assembly electionsBhupinder Singh Hooda.
ShareTweetSendShare
Previous Post

ஹரியானாவில் காங்கிரஸ் தோல்விக்கு அதீத நம்பிக்கையே காரணம் – சிவசேனா விமர்சனம்!

Next Post

தொழிலதிபர் ரத்தன் டாடா காலமானார்!

Related News

4 ஆண்டுகளாக மூடப்பட்டுள்ள மயிலாடும்பாறை வியூ பாயிண்ட் : விரைந்து திறக்க பொதுமக்கள் வலியுறுத்தல்!

உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகத் தருமபுரம் ஆதீனம் எச்சரிக்கை!

சமயபுரம் கோயிலில் பக்தர்களை அவமதித்த பெண் ஊழியரை பணிநீக்கம் செய்ய வேண்டும் – காடேஸ்வரா சுப்பிரமணியன் வலியுறுத்தல்!

உத்தரப்பிரதேசம் : இரவில் நாகினி பாம்பு போல் நடந்து கொள்ளும் மனைவி – கணவர் புகார்!

தெலங்கானா : அரசின் அலட்சியத்தால் மாணவர்கள் வெளியே நிறுத்தப்பட்ட அவலம்!

புதிய Bolero, Bolero Neo மாடல் கார்கள் அறிமுகம்!

Load More

அண்மைச் செய்திகள்

பிக் பாஸ் கன்னடா நிகழ்ச்சிக்கு வந்த திடீர் சிக்கல்!

கரூர் சம்பவம் : மடைமாற்றம் செய்ய முயலும் திமுக – தமிழிசை செளந்தரராஜன்

பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி – நேபாளத்தை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி!

அமெரிக்க ராணுவத்தின் புதிய உத்தரவால் சர்ச்சை!

ஒடிசா : 55 வயதான பெண்ணை இழுத்துச் சென்ற ராட்சத முதலை!

கேரளா : காட்டு யானை தாக்கியதில் ஒருவர் பரிதாபமாக உயிரிழப்பு!

2025 ஆம் ஆண்டின் இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு!

பீகார் தேர்தலில் பாஜக வேட்பாளராக களமிறங்கும் மைதிலி தாகூர்?

எவரெஸ்ட்டில் கடும் பனிப்புயல் : 1000 பேரின் கதி என்ன? – சவாலானது மீட்புப் பணி!

இண்டிகோ மீது நடிகை மாளவிகா மோகனன் குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies