ஹரியானாவில் காங்கிரஸ் தோல்விக்கு அதீத நம்பிக்கையே காரணம் என அதன் கூட்டணி கட்சியான சிவசேனா விமர்சித்துள்ளது.
இதுதொடர்பாக அக்கட்சியின் அதிகாரபூர்வ நாளிதழான சாம்னாவின் தலையங்கத்தில், ஹரியானாவில் பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என யாரும் எதிர்பார்க்கவில்லை என்றும், காங்கிரஸின் அராஜக போக்கும், அதீத நம்பிக்கையும்தான் தோல்விக்கு காரணம் என்றும் கூறப்பட்டுள்ளது.
ஹரியானாவில் ஆம் ஆத்மி உள்ளிட்ட இண்டி கூட்டணி கட்சியினரை காங்கிரஸ் விலக்கி வைத்தது தவறு என குற்றம்சாட்டிய சிவசேனா, ஹரியானா பேரவைத் தேர்தலில் இருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.