ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் முன்னணி வீரர் ஜோகோவிச் கால் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றார்.
சீனாவில் நடைபெற்று வரும் இந்த போட்டியின் ரவுண்ட் ஆஃப் சுற்றில் செர்பியாவின் முன்னணி வீரரான நோவக் ஜோகோவிச், ரஷ்யாவை சேர்ந்த ரோமன் சபியுலின் உடன் மோதினார்.
தொடக்கம் முதலே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜோகோவிச் 6-3, 6-2 என்ற நேர் செட் கணக்கில் ரோமன் சபியுலினை தோற்கடித்தார். இதனால் நாளை நடைபெறும் கால் இறுதி சுற்றுக்கு ஜோகோவிச் தகுதி பெற்றுள்ளார்.