ஜம்மு-காஷ்மீர் சோஜிலா பாஸ் பகுதியில் கடுமையான பனிப்பொழிவு நிலவியதால், வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்.
ஸ்ரீநகர்-லே நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இப்பகுதியில் சுமார் 4 அங்குல அளவுக்கு பனிக்கட்டி மழை பெய்தது. இதனால் சுற்றுலா பயணிகள் வெளியிடங்களுக்குச் செல்ல முடியாமல் ஹோட்டல் அறைக்குள்ளேயே முடங்கினர்.