சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக வங்கதேச வீரர் மஹ்மதுல்லா அறிவித்துள்ளார்.
வங்கதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் மற்றும் 3, டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்த நிலையில், ஐதராபாத்தில் நடைபெறும் 3-வது டி-20 போட்டியுடன் ஓய்வு பெற உள்ளதாக வங்கதேச வீரர் மஹ்மதுல்லா அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.