ரத்தன் டாடா கடந்து வந்த பாதை!
Aug 18, 2025, 05:31 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

ரத்தன் டாடா கடந்து வந்த பாதை!

Web Desk by Web Desk
Oct 10, 2024, 03:53 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மறைந்த ரத்தன் டாடா கடந்து வந்த பாதை தற்போது பார்க்கலாம்..!

நவல் டாடா- சுனு தம்பதியின் மகனாக 1937 டிசம்பர் 28-ல் மும்பையில் பிறந்தவர் ரத்தன் டாடா, இவர் டாடா குழும நிறுவனர் ஜாம்ஷெட்ஜி டாடாவின் கொள்ளுப் பேரன்.

1962-ல் அமெரிக்காவின் கார்னெல் பல்கலைக்கழகத்தில் கட்டமைப்புப் பொறியியலில் பி.எஸ்சி பட்டம், 1975-ல் ஹார்வர்டு வணிகக் கல்லூரியில் உயர் மேலாண்மைப் பட்டம் பெற்றார்.

1962-ல் டாடா குழுமத்தில் இணைந்த ரத்தன் டாடா, 1971-ல் கடும் நிதி நெருக்கடியில் சிக்கியிருந்த தி நேஷனல் ரேடியோ அண்ட் எலக்ட்ரானிக்ஸ் கம்பெனி நிறுவனத்தின் பொறுப்பு இயக்குநராக பொறுப்பேற்றார். இவரது ஆலோசனைகளால் நிதி நெருக்கடியில் இருந்து நெல்கோ மீண்டது.

1991-ம் ஆண்டு ஜே.ஆர்.டி.டாடாவிடம் இருந்து டாடா குழுமத் தலைவர் பொறுப்பை ஏற்றார். பல புதிய திட்டங்களைப் புகுத்தி நிறுவனத்தின் வருமானத்தை 10 மடங்கு உயர்த்தினார்.

கோரஸ், ஜாகுவார் லேண்ட் ரோவர் ஆகிய வெளிநாட்டு நிறுவனங்களை டாடா குழுமம் வாங்கியது.

மேலும், பங்குச் சந்தையில் மிக அதிக சந்தை முதலீடு கொண்டதாக டாடா குழுமம் திகழ்கிறது. இவரது வழிகாட்டுதலில் டாடா கன்சல்டன்சி சர்வீஸ் பொது நிறுவனமானது. நியூயார்க் பங்குச் சந்தையிலும் பட்டியலிடப்பட்டது.

நடுத்தர குடும்பத்தினருக்கு என ஒரு லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் டாடா நானோ காரினை உற்பத்தி செய்து விற்பனைக்கு கொண்டு வந்தார் ரத்தன் டாடா,

மேலும், கொரோனா நிவாரண பணிகளுக்காக சுமார் ஆயிரத்து 500 கோடி ரூபாயை நன்கொடையாக வழங்கினார்.

பத்மபூஷன், பத்மவிபூஷன், நற்பணிகளுக்கான கார்னகி பதக்கம், கவுரவக் குடிமகன் அந்தஸ்து வழங்கி சிங்கப்பூர் அரசு கெளரவித்தது.மேலும், பிரிட்டிஷ் அரசின் ஹானரரி நைட் கமாண்டர் ஆஃப் பிரிட்டிஷ் எம்பயர் ஆகிய கவுரவங்களைப் பெற்றுள்ளார்.

டைம் இதழ் வெளியிட்ட உலகின் செல்வாக்கு படைத்த 100 பேர் பட்டியல் மற்றும் உலகின் சக்திவாய்ந்த நபர்கள் பட்டியலில் இடம்பெற்றவர்.

2012 வரை டாடா குழுமத் தலைவராகவும், பின்னர், டாடா குழும அறக்கட்டளைகளின் தலைவராகவும் இருந்து வழிநடத்தியவர் ரத்தன் டாடா.

Tags: The path passed by the late Ratan Tata!
ShareTweetSendShare
Previous Post

ரத்தன் டாடா மறைவு! – பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி இரங்கல்!

Next Post

ஸ்ரீ கிருஷ்ணர் அலங்காரத்தில் எழுந்தருளிய மலையப்ப சுவாமி!

Related News

ஜாக்பாட் அடித்த ஒடிசா : 3 மாவட்டங்களில் 9 தங்க சுரங்கங்கள் கண்டுபிடிப்பு!

FORBES-ன் அமெரிக்க வாழ் இந்திய பில்லியனர்ஸ் பட்டியல் : 12 பில்லியனர்களுடன் இந்தியா முதலிடம்…!

ஆந்திர மாநிலம் : விமான நிலையத்தில் இருந்து வெளியேறும் நீரால் மக்கள் அவதி!

நியூயார்க்கில் சுதந்திர தின அணிவகுப்பு நிகழ்ச்சி!

வான்வழி அச்சுறுத்தல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் இந்தியா… ! : ‘GAME CHANGER’ ஆக களமிறக்கப்படும் R-37 VYMPEL ஏவுகணை?

புதிய மைல் கல்லை எட்டிய NASA – ISRO கூட்டு முயற்சி : NISAR ஆண்டனா சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தம்!

Load More

அண்மைச் செய்திகள்

அரசுப் பள்ளி TO இந்தியாவின் VP : தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் சி.பி. ராதாகிருஷ்ணன்!

விசாகப்பட்டினத்தில் 24 மணி நேரத்தில் 200 மிமீ மழைப்பொழிவு!

இந்தோனேசியா சுதந்திர தின விழாவில் சிறுவனின் படகு நடனம் வைரல்!

ட்ரம்ப் மனைவிக்கு பதிலளித்த ரஷ்ய மாணவி!

மயிலாடுதுறை : இருசக்கர வாகனம் உரசியதில் நிலை தடுமாறிய சிறுவன்!

சிவகங்கை : கற்பக விநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

சி.பி.ராதாகிருஷ்ணனை ஆதரிக்க வேண்டும் – இண்டி கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கு நயினார் நாகேந்திரன் வேண்டுகோள்!

ராணிப்பேட்டை : அரசு பேருந்து டயர் வெடித்து விபத்து- 20க்கும் மேற்பட்ட பயணிகள் காயம்!

சிக்கந்தர் பட தோல்விக்கு தான் பொறுப்பல்ல : இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்!

10 அடி பள்ளத்தில் விழுந்த இந்தோனேசிய வீரர் மியர்சா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies