திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சூரிய பிரபை வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
பிரம்மோற்சவத்தின் ஏழாவது நாளான இன்று காலை தங்க சூரிய பிரபை வாகனத்தில் மலையப்ப சுவாமி ஸ்ரீ கிருஷ்ணர் அலங்காரத்தில் எழுந்தருளினார்.
இதையடுத்து, நான்கு மாட வீதிகளில் உலா வந்த போது, பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என பக்திப் பரவசத்துடன் முழக்கங்களை எழுப்பினர். வீதி உலாவில், பக்தர்கள் கோலாட்டம், தப்பாட்டம் ஆடியும், பஜனைகள் பாடியும் ஊர்வலமாக அணிவகுத்து வந்தனர்.