நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட டெஸ்லாவின் ரோபோ டாக்சியை எலான் மஸ்க் வெளியிட்டார்.
டெஸ்லாவின் இந்த ரோபோ டாக்ஸியானது மனிதர்களின் தலையீடு இல்லாமல் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பட்டாம்பூச்சி வடிவத்துடன் கூடிய கதவுகளுடன் நவீன முறையில் ரோபோ டாக்சி வடிவமைக்கப்பட்டுள்ளது.
பிரத்யேகமான கேமராக்களுடன் இயங்கும் வகையில் டெஸ்லாவின் ரோபோ டாக்சி உருவாக்கப்பட்டுள்ளது. நீண்ட காலமாக பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டெஸ்லாவின் ரோபோ டாக்சியை கலிபோர்னியாவில் உள்ள ஹாலிவுட் ஸ்டூடியோவில் எலான் மஸ்க் வெளியிட்டார்.