சபரிமலை மற்றும் மாளிகைபுரம் கோயில்களின் புதிய மேல்சாந்தி தேர்வு வரும் 17-ம் தேதி நடைபெறும் என பந்தள அரண்மனை நிர்வாகம் அறிவித்துள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயில் மற்றும் மாளிகைபுரம் அம்மன் கோயில் புதிய மேல்சாந்தி பதவிக்கு 100-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ள நிலையில், இறுதிப்போட்டிக்கு தகுதியானவர்களை திருவாங்கூர் தேவசம் போர்டு தலைவர் மற்றும் தந்திரி ஆகியோர் அடங்கிய குழுவினர் தேர்வு செய்தனர்.
வரும் 17ஆம் தேதி சபரிமலை சன்னிதானத்தில் குலுக்கல் முறையில் புதிய மேல்சாந்திகள் தேர்வு செய்யப்படவுள்ள நிலையில், மேல்சாந்தி பெயர்களின் சீட்டுகளை எடுக்க பந்தளம் அரச குடும்பத்தைச் சேர்ந்த ரிஷிகேஷ் வர்மா என்ற சிறுவனும், வைஷ்ணவி என்ற சிறுமியும் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் 16-ம் தேதி சபரிமலையில் சாமி தரிசனம் செய்யும் சிறுவர், சிறுமி, மேல்சாந்தி பெயர்களின் சீட்டுகளை குலுக்கல் முறையில் தேர்வு செய்வார்கள் எனக் கூறப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து பழைய மேல்சாந்திகள் புதிய மேல்சாந்திகளிடம் பொறுப்புக்களை ஒப்படைத்துவிட்டு சன்னிதானத்தை விட்டுக் கீழே இறங்கும் நிகழ்வு நடைபெறும் என தேவசம் போர்டு அறிவித்துள்ளது.