காஞ்சிபுரத்தில் தனியார் வாகனங்களில் பொருத்தப்பட்டிருந்த அதிக ஒலி எழுப்பும் ஹாரன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
காஞ்சிபுரத்தில் மாவட்ட ஆட்சியர் , மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிடோர் உத்தரவின்பேரில் அதிக ஒலி எழுப்பும் ஹாரன்களை பறிமுதல் செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர்.
அந்த வகையில் காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் தனியார் பேருந்துகளில் பொருத்தப்பட்ட அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து வாகனங்களுக்கு அபராதம் விதித்தனர்.