திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் இடையூறு ஏற்படுத்தும் வகையில் காரில் பயணிக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார்கள் எழுந்துள்ளது.
தொடர் விடுமுறையையொட்டி ஏராளமான சுற்றுலாப் பயணிகள் நட்சத்திர ஏரி, தூண்பாறை, பாம்பார் அருவி உள்ளிட்ட பகுதிகளுக்கு வந்த வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில் சக சுற்றுலாப் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அதிக ஒலி எழுப்பியும், மற்ற வாகனங்களுக்கு வழி விடாமலும் சில இளைஞர்கள் காரில் பயணித்தனர்.
அவர்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.