ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி பண்டிகையையொட்டி தமிழக மக்களுக்கு தவெக தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனது எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ள அவர், தொழில் வளத்தில் தொடர்ந்து முன்னேறுவதற்கு ஆதாரமாக விளங்கும் தொழில் கருவிகளையும், பயன்படுத்தும் வாகனங்களையும், அறிவை போதிக்கும் புத்தகங்களையும் வணங்கி வழிபடும் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி ஆகிய திருநாட்களில், மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளும் வெற்றிபெற இனிய வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.