பயணிகள் ரயில் விபத்துக்குள்ளானது குறித்து உயர்மட்ட குழு அமைத்து விசாரணை நடத்தப்படும் என, தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆந்திரா நோக்கி மைசூரு-தர்பங்கா விரைவு ரயில் சென்று கொண்டிருந்ததாகவும் அந்த ரயிலுக்கு மெயின் லைன் செல்லுமாறு சிக்னல் கொடுக்கப்பட்டதாக தெரிவித்தார்.
ஆனால் பயணிகள் ரயில் லூப் லைனில் சென்றதாகவும், அங்கு ஏற்கனவே நின்ற சரக்கு ரயில் மீது மோதியதாகவும் கூறினார்.
நல்வாய்ப்பாக உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை என்றும், சிலர் காயமடைந்ததாகவும் அவர் கூறினார். இதனையடுத்து மீட்பு பணியில் ரயில்வே போலீசார், மாநில போலீசார், தீயணைப்பு வீரர்கள், மீட்பு படையினர் ஈடுபட்டதாக தெரிவித்தார்
காயமடைந்தவர்கள் ஸ்டான்லி மருத்துவமனை, சென்னை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
சீரமைப்பு பணிகள் முடிய சுமார் 15 மணி நேரம் ஆகலாம் என்றும், விபத்து தொடர்பாக உயர்மட்ட குழு அமைத்து விசாரணை நடத்தப்படும் என்றும் ஆர்.என்.சிங் தெரிவித்தார்,