கவரப்பேட்டை அருகே ரயில் விபத்து ஏற்பட்ட நிலையில், ஆர்.எஸ்.எஸ். சேவா பாரதி அமைப்பினர் நேரில் சென்று உதவிகளை செய்தனர்.
ஆந்திரா நோக்கி சென்று கொண்டிருந்த மைசூரு -தர்பங்கா விரைவு ரயில், சரக்கு ரயில் மீது மோதியதில், பயணிகள் ரயிலின் 11 பெட்டிகள் தடம்புரண்டு விபத்து ஏற்பட்டது. இதில் ஏராளமானோர் படுகாயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி உள்ளிட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், விபத்து நிகழ்ந்த இடத்திற்கு விரைந்த ஆர்.எஸ்.எஸ். சேவா பாரதி அமைப்பினர் பாதிக்கப்பட்டவர்களுக்கு தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுத்ததுடன், மீட்பு பணிகளிலும் ஈடுபட்டனர்.