ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக மீண்டும் வெற்றி பெற்றுள்ள நிலையில், பஞ்ச்குலா நகரில் வரும் 17 ஆம் தேதி புதிய அரசு பதவியேற்க உள்ளது.
அண்மையில் நடைபெற்ற ஹரியானா சட்டமன்ற தேர்தலில் 48 தொகுதிகளில் பாஜக அமோக வெற்றி பெற்றது, இதன் மூலம் தொடர்ந்து 3வது முறையாக ஹரியானாவில் ஆட்சியமைக்கும் வாய்ப்பை பாஜக பெற்றது.
இந்நிலையில், ஹரியானாவில் உள்ள பஞ்ச்குலா நகரில் வரும் 17ம் தேதி பதவியேற்பு விழா நடைபெறவுள்ளதாக மத்திய அமைச்சர் மனோகர் லால் கட்டார் தெரிவித்தார். இந்த விழாவில், பிரதமர் மோடி மற்றும் பாஜகவின் முக்கிய தலைவர்கள் கலந்துகொள்வார்கள் என்றும் அவர் கூறினார்.
இந்நிலையில், நவாப் சிங் சைனி மீண்டும் முதலமைச்சராக பதவியேற்கவுள்ள நிலையில், அமைச்சரவையில் 11 புதிய முகங்களுக்கு வாய்ப்பளிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த மஹிபால் தாண்டா மற்றும் மூல் சந்த் சர்மா ஆகியோரும் அமைச்சரவையில் இடம்பெற வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.