டெல்லி ராம் லீலா மைதானத்தில் நடைபெற்ற தசரா கொண்டாட்டத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தசரா விழா நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஸ்ரீ தர்மிக் லீலா கமிட்டி சார்பில் டெல்லி ராம் லீலா மைதானத்தில் ராவண வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், குடிரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டிருந்த ராவணன், கும்பகர்ணன் மற்றும் மேகநாத்தின் உருவ பொம்மைகள் மீது அம்புகள் எய்து எரிக்கப்பட்டது.
முன்னதாக, ராமர், லட்சுமணன் இந்து கடவுள்களின் வேடமணிந்த கலைஞர்களின் நெற்றியில் குடியரசு தலைவர், பிரதமர் மோடி திலகமிட்டு வாழ்த்தினர்.