ரயில் விபத்தில் திட்டமிட்டு திமுகவும், அதன் கூட்டணி கட்சிகளும் மத்திய அரசுக்கு எதிரான கருத்தை பரப்புவதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் குற்றம் சாட்டியுள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜனநாயக முறையில் பாஜகவில் மட்டுமே உறுப்பினர் சேர்க்கை நடைபெறுவதாகவும், உறுப்பினர் சேர்க்கை வரும் 15-ம் தேதி வரை நடைபெறும் என தெரிவித்தார். “மெரினா சம்பவத்தை மறைக்க திமுக நாடகம் ஆடுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
ரயில் விபத்தில் திட்டமிட்டு திமுகவும், கூட்டணி கட்சிகளும் மத்திய அரசுக்கு எதிரான கருத்தை பரப்புகின்றன. மெரினாவில் 5 பேர் உயிரிழந்தது பற்றி திமுக கூட்டணி கட்சிகள் பேசினார்களா? மெரினா சம்பவத்தை மறைக்க திமுக ரயில் விபத்தில் நாடகமாடுகின்றனர். திமுகவின் மூன்றரை வருட ஆட்சி முழுக்க முழுக்க வேதனையான ஆட்சி என எல்.முருகன் சாடினார்.