உதகையில் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஒரே நேரத்தில் குவிந்ததால் உதகை – கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் 8 கிலோ மீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
ஆயுத பூஜை, விஜயதசமி பண்டிகையொட்டி நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு பொதுமக்கள் அதிகளவில் வருகை தந்தனர். இந்நிலையில், உதகை – கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 8 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஒன்றன்பின் ஒன்றாக வாகனங்கள் ஊர்ந்து சென்றன.
மேலும், பைன் பாரஸ்ட் மற்றும் உதகை – கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் பலர் அனுமதியின்றி ஆக்கிரமிப்பு செய்து கடைகள் அமைத்துள்ளதால், சாலையின் இருபுறமும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதனால், சுற்றுலா பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர். இதனிடையே, போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை உடனடியாக அகற்றவேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.