தமிழகத்தில் கன மழை தொடங்கியுள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமை செயலாளர் கடிதம் எழுதியுள்ளார்.
வரும் 17-ம் தேதி வரை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆறுகள், ஏரிகள் மற்றும் நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் அதிகரிக்கவும், மலை பாதைகளில் மண் சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதால், மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் ஆணையிடப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் பணிகளை துரிதப்படுத்த அனைத்து துறை செயலாளர்கள், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.