விருதுநகர், சிவகாசி உள்ளிட்ட பகுதிகளில் மத்திய அமைச்சர் எல்.முருகன் பாஜக உறுப்பினர் சேர்க்கை பணியில் ஈடுபட்டார்.
விருதுநகர் கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த பாஜக நிர்வாகிகளோடு இணைந்து சென்று உறுப்பினர் சேர்க்கை பணிகள் மேற்கொண்டோம். விருதுநகர் மாவட்டத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஆயிரம்கண் மாரியம்மன் கோவில் சென்று சுவாமி தரிசனம் செய்த பிறகு, சாலியர் சமுதாயத்தைச் சேர்ந்த பொதுமக்களைச் சந்தித்தேன்.
விசைத்தறி தொழில் புரிவதை தங்களது தொழிலாக கொண்டிருக்கும் இம்மக்களிடம், விசைத்தறி துறையினரின் தொழில் நன்மைக்கென்று மத்திய அரசு செய்து வருகின்ற பணிகள் பற்றி விளக்கமளித்தேன். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொதுமக்கள், நமது கட்சியின் உறுப்பினர்களாக தங்களை இணைத்துக் கொண்டார்கள்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில், நமது கட்சி நிர்வாகிகளோடு இணைந்து சென்று, பட்டாசு தொழிற்சாலையில் பணிபுரிகின்ற தொழிலாளர்களை சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடியதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
சிவகாசியில் உள்ள சிங்கம்பட்டி பகுதியில் இயங்கி வருகின்ற பட்டாசு ஆலை ஒன்றில் பணியாற்றி வருகின்ற தொழிலாளர்களிடம், மகளிர் நலனுக்காக நமது மத்திய அரசு முழு ஈடுபாட்டுடன் மேற்கொண்டுள்ள நலத்திட்டங்கள் பற்றி பேசுகின்ற வாய்ப்பு அமைந்தது. பெண்களின் துயரம் போக்கும் வகையில், ‘உஜ்வாலா’ திட்டமியற்றி மானிய விலையிலான கேஸ் சிலிண்டர்கள் வழங்கப்பட்டது;
மகளிர் சொந்தக்காலில் நின்று சுயதொழில் செய்யும் வகையில் மகளிர் கடன் திட்டங்கள்; அரசின் ஒவ்வொரு நிதியுதவியும், பெண்களின் கைகளுக்கு நேரடியாக சென்றடையும் வகையில் ‘ஜன்தன் வங்கிக் கணக்கு’ உருவாக்கித் தந்தது என்று, பிரதமர் மோடியின் தலைமையில் நாம் செய்துள்ள வளர்ச்சிப் பணிகள் குறித்த விளக்கங்கள் அளித்தேன். அங்கு பணிபுரிகின்ற பெண் தொழிலாளர்கள் தங்களை நமது கட்சியில் உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டதுடன், நமது ஆட்சி மீதான அவர்களது அன்பையும் வெளிப்படுத்தினார்கள்.
இதனியடையே அருப்புக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தியாவில் மொத்தம் 7 மெகா டெக்ஸ்டைல் பார்க் அமைக்கப்பட்டுள்ளதாகவும், அருப்புக்கோட்டையில் ஒரு டெக்ஸ்டைல் பார்க் அமையவுள்ளதாகவும் கூறினார். பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த பின்னர், மக்களுக்கு தேவையில்லாத 1500 சட்டங்கள் நீக்கப்பட்டதாகவும் எல்.முருகன் தெரிவித்தார்.
இதேபோல் மதுரை நகர் மாவட்டத்தில் நாம் மேற்கொண்டு வரும் உறுப்பினர் சேர்க்கை பணிகளின் இடையே, மதுரை சௌராஷ்டிரா சேம்பர் ஆஃப் காமர்ஸ் குழுவினருடன் நடைபெற்ற தொழில் முனைவோருக்கான கலந்தாய்வு கூட்டத்தில் பங்குபெற்றேன்.
நமது பாரதிய ஜனதா கட்சியின் மதுரை நகர் மாவட்டத் தலைவர், மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தொழில் முனைவோர்கள் பலரும் கலந்து கொண்ட இந்நிகழ்வில், பிரதமர் மோடி
தமிழர்களுக்கும், சௌராஷ்டிராவினருக்கும் இடையிலான நெடுங்கால நெருங்கிய உறவை குறிப்பிடும் வகையில், சௌராஷ்டிரா தமிழ்ச் சங்கம் நிகழ்ச்சியை நடத்தியது பற்றி விளக்கமளித்தேன்.
தேசத்தின் வளர்ச்சியில் நாம் ஆற்றி வருகின்ற பங்களிப்புகளை விளக்கிக் கூறிய பின், நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தொழில் முனைவோர்கள் நமது கட்சியில் உறுப்பினர்களாக தங்களை இணைத்துக் கொண்டார்கள் என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.