வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், 4 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்தாண்டை விட இந்தாண்டு தென்மேற்கு பருவமழை அதிகமாகவே இருந்தது. அதுபோல இந்தமுறை வடகிழக்கு பருவமழையும் இயல்பை விட அதிகமாக பெய்ய வாய்ப்புள்ளது என்றும், வடதமிகழத்தில் இயல்பை விட அதிகமாகவும், தென்தமிழகத்தில் இயல்பைவிட குறைவாகவும் மழைபொழிய வாய்ப்புள்ளது எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அந்த வகையில், நாளை வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளநிலையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களுக்கு இன்று கனமழைக்கான எச்சரிக்கையும், நாளை மிக கனமழைக்கான எச்சரிக்கையும், நாளை மறுநாள் அதி கனமழைக்கான ரெட் அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது.
இதனால் 4 மாவட்டங்களிலும் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், நாளை முதல் 18ஆம் தேதி வரை தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணிபுரியவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.