தூக்கு கயிற்றை முத்தமிட்டு தமிழர்களின் வீரத்தை உலகிற்கு உணர்த்தியவர் மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மன் என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள பதிவில், “இந்திய சுதந்திரப் போராட்ட வீரரும், தமிழகத்தின் அடையாளங்களில் ஒருவராக போற்றப்படுபவருமான மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களின் நினைவு தினம் இன்று.
ஆங்கிலேயர்களை எதிர்த்து நம் பாரத தேசத்திற்காக போராடி, பெரும் வீரமுடனும், தன்னுடைய படைபலத்துடன் கூடிய விவேகத்துடனும் செயல்பட்டார். ஆங்கிலேயர்கள் விதித்து வந்த வரி வசூலிக்கும் முறைக்கு எதிராக தனது தீவிர எதிர்ப்பை வெளிப்படுத்தியவர், அதற்காய் அவர் மீது தொடுக்கப்பட்ட போர்களையும் வென்று களம் கண்டார்.
தன்னை தூக்கு மேடை ஏற்றிய போதும் தூக்கு கயிற்றை முத்தமிட்டு தமிழர்களின் வீரத்தை உலகிற்கு உணர்த்திய மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களின் நினைவு தினமான இன்று, அவரது வீரம் செறிந்த நினைவுகளைப் போற்றி வணங்கிடுவோம் என எல்.முருகன் தெரிவித்துள்ளார்.