கனமழை காரணமாக திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் குடியிருப்புக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்றதால் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை கொட்டிதீர்த்தது. இதனால் நாலூர், மீஞ்சூர்,கேசவபுரம், அத்திப்பட்டு புதுநகர் உள்ளிட்ட ஏராளமான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.
பல இடங்களில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறும் நிலையும் ஏற்பட்டது. தற்போது தண்ணீர் சூழ்ந்த பகுதிகளில் மின்மோட்டார்கள் பயன்படுத்தப்பட்டு தண்ணீரை அப்புறப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.