சென்னை கொளத்தூர் தொகுதியில் ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார்.
தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக திருவள்ளூா், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது.
இதையடுத்து சென்னையில் கடந்த 15-ஆம் தேதி கனமழை பெய்ததில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது. இந்நிலையில், தனது சொந்த தொகுதியான கொளத்தூரில் வெள்ள பாதிப்பு தொடர்பாக ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின், மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார்.
அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், மழையை வைத்து எடப்பாடி பழனிசாமி அரசியல் செய்து வருவதாக குற்றம் சாட்டினார். மேலும், எவ்வளவு மழை பெய்தாலும் அதனை சமாளிக்க தமிழக அரசு தயாராக இருப்பதாகவும் கூறினார்.