மேற்குவங்க மாநிலம் கொல்கத்தா இஎஸ்ஐ மருத்துவமனையில் தீ விபத்து நேரிட்டதால் நோயாளிகள் வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.
கொல்கத்தாவின் ஷீல்டா நகரில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனையில் அதிகாலையில் தீ விபத்து ஏற்பட்டது.
தகவல் அறிந்து 10 தீயணைப்பு வாகனங்களில் விரைந்த தீயணைப்பு வீரர்கள், 2 மணி நேர போராட்டத்திற்குப் பின், தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
தீ விபத்தில் நல்வாய்ப்பாக யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது. எனினும், நோயாளிகளின் பாதுகாப்பு கருதி, அவர்கள் வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.