அண்டை நாடுகளில் இந்துக்கள் மத ரீதியாக துன்பத்தை அனுபவிப்பதாக குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் வேதனை தெரிவித்தார்.
தேசிய மனித உரிமைகள் ஆணைய விழாவையொட்டி, டெல்லி விஞ்ஞான் பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், அண்டை நாடுகளில் இந்துக்கள் துயரப்படுவதாகவும், அதை மனித உரிமை காவலர்கள் கைகட்டி வேடிக்கை பார்ப்பது வேதனை அளிப்பதாகவும் தெரிவித்தார்.
மனித உரிமை ஆர்வலர்கள் மட்டுமன்றி பொதுமக்களும் இந்துக்களின் துயரத்தை கண்டு மெளனம் காப்பது ஏற்புடையது அல்ல என்றும், இதற்கு எதிராக ஒவ்வொருவரும் வெகுண்டெழ வேண்டும் என்றும் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் கேட்டுக்கொண்டார்.