டெல்லியில் காற்று மாசுவுடன், பனி மூட்டமும் அதிகளவில் காணப்பட்டதால், சாலையில் முகப்பு விளக்குகளை எரியவிட்டப்படி வாகன ஓட்டிகள் சென்றனர்.
தலைநகர் டெல்லியின் மிகப்பெரும் பிரச்னையாக காற்று மாசு உருவெடுத்து வருகிறது. டெல்லிக்கு அருகாமையில் உள்ள ஹரியானா, பஞ்சாப் மாநிலங்களில் விவசாய கழிவுகளை எரிப்பதால் ஏற்படும் புகை, டெல்லியில் காற்று மாசுவை அதிகளவில் ஏற்படுத்துகிறது.
இதனை கட்டுப்படுத்த, ஆனந்த் விஹார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாகனம் மூலம் தண்ணீர் தெளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், டெல்லியின் பல்வேறு பகுதிகளில், காற்று மாசுவுடன், பனி மூட்டமும் அதிகளவில் இருந்தது.
இதனால் எதிரில் வரும் வாகனங்கள் தெரியாததால், வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டு சென்றனர்.