இந்தி திணிப்பு என்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாஜக மூத்த தலைவர் டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் கண்டனம் கண்டனம் தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், தூர்தர்ஷனில் பல ஆண்டுகளாக கொண்டாடப்படும் துறை சார்ந்த விழாவில், இந்தி திணிப்பு என்ற தோற்றத்தை திமுக ஏற்படுத்த முயற்சிப்பது கண்டனத்திற்குரியது என்று கூறியுள்ளார்.
தங்கள் குடும்ப தொலைக்காட்சிக்கு தமிழ் பெயர் வைக்காமல் ஆங்கில பெயரை வைத்துக் கொண்டு தமிழ் பெயர் பற்றி முதலமைச்சர் பேசுவது வேடிக்கையானது என்று கூறிய டாக்டர் தமிழிசை செளந்தரராஜன்,
பிரதமர் மோடி தமிழுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிப்பதை உதாரணத்துடன் சுட்டிக்காட்டினார்.
அந்த வகையில் பனாரஸ் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை, மும்பை துறைமுகத்திற்கு தமிழ் பெயர் மற்றும் ராஜராஜ சோழரின் நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டதை மேற்கோள்காட்டிய டாக்டர் தமிழிசை செளந்தரராஜன், தமிழ்நாட்டின் அடையாளமான செங்கோல் நாடாளுமன்றத்தில் நிறுவப்பட்டது நமக்கு பெருமையளிப்பதாகவும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.