நாடு முழுவதும் கடந்த ஆண்டில் ஏற்பட்ட சாலை விபத்தில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடத்தில் இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
கடந்த 2023-ஆம் ஆண்டில் நாடு முழுவதும் சாலை விபத்தில் ஒரு லட்சத்து 73 ஆயிரம் பேர் உயிரிழந்ததாக புள்ளி விவரம் தெரிவிக்கிறது.
அந்த வகையில், சராசரியாக நாளொன்றுக்கு 474 பேர், அதாவது மூன்று நிமிடத்துக்கு ஒருவர் சாலை விபத்தில் இன்னுயிரை இழந்தது ஆய்வில் தெரியவந்துள்ளது.
சாலை விபத்தில் உயிரிழப்பை பொறுத்தமட்டில், உத்தரப்பிரதேசம் முதலிடமும், தமிழகம் இரண்டாம் இடமும் வகிக்கின்றன.
அதேவேளையில், காயமடைவோரை பொறுத்தமட்டில் 72 ஆயிரத்து 292 என்ற எண்ணிக்கையில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது. மத்தியப்பிரதேசம், கேரளா ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களில் இருப்பதாக புள்ளி விவரம் தெரிவிக்கிறது.