நெல்லை நீட் பயிற்சி மையத்தில் அத்துமீறல், சரமாரியாக தாக்கப்பட்ட மாணவர்கள் - சிறப்பு கட்டுரை!
Oct 18, 2025, 12:34 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நெல்லை நீட் பயிற்சி மையத்தில் அத்துமீறல், சரமாரியாக தாக்கப்பட்ட மாணவர்கள் – சிறப்பு கட்டுரை!

Web Desk by Web Desk
Oct 19, 2024, 08:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நெல்லை ஜல் நீட் பயிற்சி மையத்தில் மாணவர்கள் தாக்கப்பட்டது தொடர்பாக தமிழ் ஜனம் தொலைக்காட்சி செய்தி வெளியிட்ட நிலையில், அங்கு மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர் நேரில் ஆய்வு நடத்தி மாணவர்களிடம் விசாரணை மேற்கொண்டார். பயிற்சி மையத்தில் நடந்தது என்ன? இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்…

நெல்லை மாநகரில் ஜல் நீட் அகாடமி என்ற பெயரில் நீட் பயிற்சி மையம் கடந்த 2 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த பயிற்சி மையத்தை கேரளாவை சேர்ந்த ஜலாலுதீன் அஹமத் என்பவர் நடத்தி வருகிறார். கடந்த ஆண்டு இந்த பயிற்சி மையத்தில் பயின்ற 12 பேருக்கு அரசு மருத்துவ கல்லூரிகளில் இடம் கிடைத்ததாக கூறப்படுகிறது.

அதனடிப்படையில் தமிழ்நாடு மற்றும் கேரளாவைசேர்ந்த பல மாணவர்கள் இந்த பயிற்சி மையத்தில் சேர்ந்து பயிற்சி பெற்று வருகின்றனர். மாணவர்களுக்கு பயிற்சியளிக்க ஒவ்வொருவரிடம் இருந்தும் சராசரியாக, 60 ஆயிரம் ரூபாய் முதல் 80 ஆயிரம் ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ஜல் நீட் அகாடமி பயிற்சி மையத்தில் பயிலும் மாணவர்கள் சிலர் பயிற்சி வகுப்பின்போது தூங்கிய நிலையில், உரிமையாளர் ஜலாலுதீன் அவர்களை வரவழைத்து பிரம்பால் சரமாரியாக அடித்து சித்திரவதை செய்துள்ளார். அத்துடன் அங்கு பயிலும் மாணவிகள் காலணிகளை சரியாக அடுக்கி வைக்கவில்லை எனக்கூறி, வகுப்பறையில் வைத்தே அவர்கள் மீது காலணியை எடுத்து வீசி எறிந்துள்ளார்.

இந்த சம்பங்கள் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில், தமிழ் ஜனம் தொலைக்காட்சியில் உடனடியாக செய்தி வெளியிடப்பட்டது. தமிழ் ஜனம் தொலைக்காட்சியில் செய்தி வெளியிட்ட 30 நிமிடங்களில் மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர் கண்ணதாசன், ஜல் நீட் பயிற்சி மையத்தில் நேரில் ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தினார்.

அங்கு பயின்று வரும் மாணவர்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்திய கண்ணதாசன், அவர்கள் அளித்த வாக்குமூலங்களையும் பதிவு செய்து கொண்டார். அப்போது மாணவர்கள் தங்களது உடலில் உள்ள தழும்புகளை காட்டி, தங்களுக்கு இழைக்கப்படும் இன்னல்கள் தொடர்பாக எடுத்துரைத்தனர்.

ஆய்வுக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த கண்ணதாசன், நீட் பயிற்சி மையத்தில் மாணவர்கள் தாக்கப்பட்ட விவகாரத்தை, மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரிக்கும் என தெரிவித்தார்.

மாணவர்கள் தாக்கப்பட்ட விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில், ஜல் நீட் பயிற்சி மையத்தின் உரிமையாளர் ஜலாலுதீன் அஹமத் மீது நெல்லை போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பயிற்சி மையத்தின் பிற நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தி வரும் போலீசார், தலைமறைவான உரிமையாளர் ஜலாலுதீன் அஹமதை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Tags: student attackedJalaluddin AhmedNellaitamil janam tvNEET training center
ShareTweetSendShare
Previous Post

மருத்துவர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் – மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வேண்டுகோள்!

Next Post

ஹமாஸ் அமைப்பின் ஹிட் லிஸ்ட் பயங்கரவாதி : சின்வார் கொல்லப்பட்டது எப்படி? – சிறப்பு கட்டுரை!

Related News

தென்கிழக்கு அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி – வானிலை ஆய்வு மையம் தகவல்!

மதுரை மாநகராட்சி முறைகேட்டின் மர்மம் எப்போது விலகும்? : நயினார் நாகேந்திரன்

சென்னையில் வழக்கறிஞர் தாக்கப்பட்ட விவகாரம் – போலீசாருக்கு சரமாரி கேள்வி எழுப்பிய உயர் நீதிமன்றம்!

மக்களுக்கு திமுக கொடுத்தது அல்வா மட்டும்தான் – வினோஜ் பி.செல்வம்

தந்தையை இழந்த பெண் குழந்தைகளுக்கு சிறப்பு திட்டம் தேவை – வானதி சீனிவாசன்

டி.ஆர்.பி ராஜா அமைச்சரைப் போல பேச வேண்டும் – அன்புமணி

Load More

அண்மைச் செய்திகள்

தீபாவளிக்கு மறுநாளான அக்டோபர் 21-ம் தேதி விடுமுறை : தமிழக அரசு அறிவிப்பு!

நெல்லையில் பட்டாசு, புத்தாடை வாங்கி திரண்ட மக்கள் – கடும் போக்குவரத்து நெரிசல்!

கோவை பேருந்து நிலையத்தில் அலைமோதிய கூட்டம் – போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு படையெடுத்த மக்கள் : சென்னை – திருச்சி நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்!

நற்பணி மன்றம் விவகாரம் – அண்ணாமலை வேண்டுகோள்!

தீபாவளி பண்டிகை : மக்களின் மனம் கவர்ந்த “மாப்பிள்ளை சம்பா முறுக்கு” – சிறப்பு தொகுப்பு!

ஐப்பசி மாத பூஜை – சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு!

தீபாவளி பண்டிகைக்கு 9 நாட்கள் விடுமுறை – மகிழ்ச்சியில் திருப்பூர் பனியன் நிறுவன ஊழியர்கள் – சிறப்பு தொகுப்பு!

களைகட்டும் தீபாவளி வியாபாரம் – தங்கம் விலை உயர்வால் கவரிங் விற்பனை அதிகரிப்பு!

ரஷ்ய எண்ணெய் கொள்முதல் நிறுத்தமா? : டிரம்பின் கருத்துக்கு இந்தியா மறுப்பு – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies