மேற்குவங்கத்தில் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தும் முடிவை மருத்துவர்கள் கைவிட வேண்டும் என அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கொல்கத்தா மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில், அதற்கு நீதி கேட்டு சக பயிற்சி மாணவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், முதலமைச்சர் மம்தா பானர்ஜி தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் போராட்டத்தை தீவிரப்படுத்தப்போவதாகவும் பயிற்சி மாணவர்கள் அறிவித்துள்ளனர்.
இந்நிலையில், பயிற்சி மருத்துவர்களை தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்ட மம்தா பேனர்ஜி, “அனைவருக்கும் எதிர்ப்பு தெரிவிக்க உரிமை உள்ளது ; ஆனால் அது சுகாதார சேவைகளை பாதிக்ககூடாது” என்று கூறியுள்ளார்.
எனவே பயிற்சி மருத்துவர்கள் தங்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட்டு மீண்டும் பணிக்கு திரும்பவேண்டும் என மம்தா பேனர்ஜி கேட்டுக்கொண்டுள்ளார்.