காவலர் வீர வணக்க நாள் - நினைவு சின்னத்தில் தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் மரியாதை!
Aug 19, 2025, 02:51 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

காவலர் வீர வணக்க நாள் – நினைவு சின்னத்தில் தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் மரியாதை!

Web Desk by Web Desk
Oct 21, 2024, 12:40 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காவலர் வீர வணக்க நாளையொட்டி பல்வேறு மாவட்ட காவல்துறையினர் சார்பில் உயிர்நீத்த காவல்துறை அதிகாரிகளுக்கு காவலர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தப்பட்டது.

கடந்த 1959-ம் ஆண்டு இந்தியா- சீனா எல்லை பகுதியில் நடந்த மோதலில் இந்திய காவலர்கள் பலர் வீரமரணம் அடைந்தனர். அவர்களது நினைவை போற்றும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21-ஆம் தேதி காவலர் வீர வணக்க நாளாக கடைபிடிக்கப்படுகிறது.

இதனையொட்டி சென்னை காவல் துறை தலைமை இயக்குநர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள காவலர் நினைவுச் சின்னத்தில், டிஜிபி சங்கர் ஜிவால் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அதனைத்தொடர்ந்து பேசிய அவர், இந்த ஆண்டு மட்டும் 213 ராணுவத்தினர் மற்றும் காவல்துறையினர் வீரமரணமடைந்துள்ளதாக கூறினார். மேலும், அவர்களது வீர மரணம் என்றும் வீண் போகாது எனவும் தெரிவித்தார்.

இதேபோல, புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் உள்ள காவலர் நினைவு சின்னத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே தலைமையிலான காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

சேலத்தில் உள்ள காவலர் நினைவு சின்னத்தில், காவல் ஆணையாளர் பிரவீன் குமார் அபினவ் உள்ளிட்ட காவல்துறை உயர் அதிகாரிகள், மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பணியின்போது உயிர்நீத்த காவலர்களின் நினைவை போற்றும் விதமாக காவல்துறையினர் சார்பில் மாரத்தான் ஓட்ட பந்தயம் நடைபெற்றது. இதில் 500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் மற்றும் மாணவ – மாணவிகள் கலந்துகொண்டனர்

மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை சார்பில் காவலர்கள் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. அப்போது, மாவட்ட ஆட்சியர் மகாபாரதி மற்றும் எஸ்.பி ஸ்டாலின் ஆகியோர் உயிர்நீத்த போலீசாருக்கு மலர் வளையம் வைத்து 36 குண்டுகள் முழங்க அஞ்சலி செலுத்தினார்.

Tags: ChennaiDGP shankar jiwalPolice Martyrs MemorialPolice Commemoration Daytamilnadu dgp
ShareTweetSendShare
Previous Post

பாஜக 3.0 ஆட்சியில் ரூ.9 லட்சம் கோடி மதிப்பிலான உட்கட்டமைப்பு திட்டங்கள் – பிரதமர் மோடி

Next Post

நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை – முல்லைப் பெரியாறு உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு!

Related News

டிரம்பின் வரிகள் அமெரிக்காவை தனிமைப்படுத்தும் : பொருளாதார நிபுணர் ஜெஃப்ரி சாக்ஸ் கடும் எச்சரிக்கை!

பொருளாதார நெருக்கடியில் சீனா : அமெரிக்காவுக்கு தாவும் முதலீட்டாளர்களால் அதிர்ச்சி!

பாகிஸ்தானை புரட்டிப்போட்ட பெருவெள்ளம் : 48 மணி நேரத்தில் 300 பேருக்கு மேல் பலி..!

ஆயுத கொள்முதலை தொடரும் பாகிஸ்தான் : 3-வது ஹேங்கர் ரக நீர்மூழ்கி கப்பலை வழங்கிய சீனா!

பூமியை அதி வேகமாக நெருங்கும் ‘சிறுகோள்’ : ஆபத்தில்லை என உறுதிப்படுத்திய நாசா!

FORBES-ன் அமெரிக்க வாழ் இந்திய பில்லியனர்ஸ் பட்டியல் : 12 பில்லியனர்களுடன் இந்தியா முதலிடம்…!

Load More

அண்மைச் செய்திகள்

புதினின் “மலக் கழிவுகள்” சேகரிக்க பிரத்தியேக சூட்கேஸ் : காரணம் என்ன தெரியுமா?

ஓங்கும் புதின் கை : கேள்விக்குறியாகும் உக்ரைன் எதிர்காலம்!

ஜாக்பாட் அடித்த ஒடிசா : 3 மாவட்டங்களில் 9 தங்க சுரங்கங்கள் கண்டுபிடிப்பு!

E-OFFICE – முந்தும் திரிபுரா!

அரசுப் பள்ளி TO இந்தியாவின் VP : தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் சி.பி. ராதாகிருஷ்ணன்!

பிரதமர் மோடி – ரஷ்ய அதிபர் புதின் தொலைபேசியில் பேச்சு!

மதுரை : பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் போராட்டம்!

கிட்னி திருட்டு சம்பவம் – அவசர வழக்காக விசாரிக்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் முறையீடு!

அமைச்சர் மனோதங்கராஜ் உட்பட 11 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்!

மகாராஷ்டிரா : மும்பை புறநகரில் கொட்டித் தீர்க்கும் கனமழை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies