அமெரிக்கா டெக்சாஸ் மாகாணம் ஹூஸ்டன் நகரில் உயர் ரக மின்கோபுரத்தில் ஹெலிகாப்டர் மோதி விபத்துக்குள்ளானதில், குழந்தை உள்ளிட்ட நான்கு பேர் உயிரிழந்தனர்.
ஹெலிகாப்டர் தாழ்வாக பறந்ததும், உயர் ரக கோபுரத்தின் விளக்கு செயல்படாததும் விபத்துக்கு காரணம் என தெரியவந்துள்ளது. உயர் ரக கோபுரத்தில் ஹெலிகாப்டர் மோதிய வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
















