திருப்பூர், கோவை, நீலகிரி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!
Apr 6, 2026, 08:23 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருப்பூர், கோவை, நீலகிரி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!

Murugesan M by Murugesan M
Oct 22, 2024, 02:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழ்நாட்டில் இன்று தேனி, திண்டுக்கல் திருப்பூர் கோவை நீலகிரி ஈரோடு நாமக்கல் சேலம் தர்மபுரி கிருஷ்ணகிரி உள்ளிட்ட 10 மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது :

“தென் தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. நேற்று (21-10-2024) மத்தியகிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து, நேற்று மாலை 0530 மணி அளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது.

இது, மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று காலை 0530 மணி அளவில், மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, அதே பகுதிகளில், (ஒரிசா தென்கிழக்கே 700 கிலோமீட்டர் தொலைவிலும், சாகர் தீவுகளுக்கு (மேற்கு வங்காளம்) தெற்கு- தென்கிழக்கே 750 கிலோமீட்டர் தொலைவிலும், கேப்புப்பாராவிற்கு (வங்கதேசம்) தெற்கு- தென்கிழக்கே 730 கிலோமீட்டர் தொலைவிலும் நிலைகொண்டுள்ளது.

இது மேலும், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில், 23-ஆம் தேதி வாக்கில் புயலாக வலுபெறக்கூடும். இது மேலும், வடமேற்கு திசையில் நகர்ந்து, 24-ஆம் தேதி காலை வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் தீவிர புயலாக நிலவக்கூடும்.

இது, வடக்கு ஒரிசா – மேற்கு வங்காள கடற்கரை பகுதிகளில், பூரி – சாகர் தீவுகளுக்கு இடையே, தீவிர புயலாக 24 ஆம் தேதி இரவு – 25 ஆம் தேதி காலை கரையை கடக்கக்கூடும். அச்சமயத்தில் அப்பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 100 முதல் 110 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 120 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

22.10.2024: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், சேலம், நாமக்கல், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

23.10.2024 தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

24.10.2024: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

25.10.2024 முதல் 28.10.2024: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

“அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய  மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33-34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33-34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: low pressurerain warningmetrological centertamilnadu rainheavy rainrain alertweather update
ShareTweetSendShare
Previous Post

திமுக கூட்டணியில் புகைச்சல் – எடப்பாடி பழனிச்சாமி தகவல்!

Next Post

ரஷ்யாவில் பிரிக்ஸ் உச்சி மாநாடு – கசான் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

Related News

நடிகர் விஜய், திமுகவுடன் மறைமுக கூட்டணி – மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்!

தமிழக சட்டப்பேரவை தேர்தல்-வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள்!

ஊடுருவல்காரர்களை வெளியேற்ற பாஜக-வுக்கு வாக்களியுங்கள் – பிரதமர் மோடி!

மீண்டும் எடப்பாடியார் ஆட்சி அமைய வேண்டும்! – முன்னாள் அமைச்சர் தங்கமணி

சிறுபான்மை மக்களுக்கு எதிரானவர் காங்கிரஸ் வேட்பாளர் – பாஜக வேட்பாளர் விஜய தரணி குற்றச்சாட்டு!

சட்டமன்ற தேர்தல்: தமிழகத்திற்கு படையெடுக்கும் தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவர்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

அத்திக்கடவு – அவிநாசி திட்டத்தை திமுக அரசு கிடப்பில் போட்டது- மத்திய அமைச்சர் எல்.முருகன்!

நெருக்கடி நிலையிலும் பெட்ரோல் வினியோகம் – மத்திய அரசுக்கு காங்கிரஸ் தலைவர்கள் பாராட்டு!

தென்மாநிலங்களில் மக்களவைத் தொகுதிகள் குறைக்கப்படாது – பிரதமர் மோடி உறுதி!

இனியும் மொழியை வைத்து திமுக அரசியல் செய்ய முடியாது – தமிழிசை உறுதி!

அரசியல் தோல்விகளை மறைக்க இந்தி திணிப்பு என நாடகம் ஆடுவதா? – தர்மேந்திர பிரதான் கேள்வி!

மக்களுடன் தரையில் அமர்ந்து வாக்கு சேகரித்த கன்னியாகுமரி அதிமுக வேட்பாளர் தளவாய் சுந்தரம்!

அதிமுக அழுத்தம் காரணமாக மகளிர் உரிமைத்தொகையை திமுக கொடுத்தது – இபிஎஸ்

அரசு கஜானாவை ஏடிஎம் இயந்திரம் போல் பயன்படுத்தும் ஸ்டாலின் குடும்பம் – பியூஷ் கோயல்

 புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தல் – பாஜக தேர்தல் அறிக்கை வெளியீடு!

மீனவர்களை மீட்டதைக்கூட கொச்சைப்படுத்தி அரசியலாக்குகின்றனர் – நயினார் நாகேந்திரன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies