பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக டெல்லியிலிருந்து புறப்பட்ட பிரதமர் மோடி, ரஷ்யா சென்றடைந்தார்.
பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகள் அங்கம் வகிக்கும் பிரிக்ஸ் கூட்டமைப்பின் 16ஆவது உச்சி மாநாடு ரஷ்யாவின் கசான் நகரில் இன்றும் நாளையும் நடைபெறுகிறது. இதையொட்டி, ரஷ்யா சென்ற பிரதமர் மோடிக்கு அந்நாட்டு சார்பில் கசான் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் தாம் தங்கும் ஹோட்டலுக்கு சென்ற பிரதமர் மோடி, அங்கு தன்னை வரவேற்ற இந்திய வம்சாவளியினருடன் கலந்துரையாடினார். அப்போது ரஷ்ய நாட்டைச் சேர்ந்த பெண்கள், இந்திய பாரம்பரிய முறைப்படி பிரதமர் மோடியை வரவேற்றனர்.
தொடர்ந்து பிரதமர் மோடியை வரவேற்கும் விதமாக ரஷ்ய பாரம்பரிய நடனம் அரங்கேறியது. அதை ஆர்வத்துடன் கண்டு ரசித்த பிரதமர் மோடி, நடன கலைஞர்களை கைதட்டி வெகுவாக பாராட்டினார்.