மதுரையில் கணவர் கண் முன்னே மனைவியின் தங்கநகை பறிக்கப்பட்ட சம்பவம் குறித்த சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
பந்தடி பகுதியை சேர்ந்த தம்பதி துவாரகநாத் – மஞ்சுளா. இவர்கள் தீபாவளியை முன்னிட்டு பொருட்கள் வாங்கிவிட்டு வீட்டு வாசலில் இருசக்கர வாகனத்தில் வந்து நின்றுகொண்டிருந்தனர்.
அப்போது மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள், மஞ்சுளா அணிந்திருந்த நகையை பறிக்க முயன்றனர். இதனால், அவர் சாலையில் தரதரவென்று இழுத்துச்செல்லப்பட்டார்.