கோவை மாவட்டம், அன்னூரில் விற்பனைக்காக குட்காவை பதுக்கி வைத்திருந்த மூவரை போலீசார் கைது செய்தனர்.
அன்னூரில் குட்கா பொருட்கள் பதுக்கி விற்கப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் சக்திசாலையில் உள்ள பசுர் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது வாகனத்தில் 42 கிலோ குட்கா பொருட்கள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அவற்றை பறிமுதல் செய்த போலீசார், மூவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.