திருச்சியில் உள்ள அரசு கல்லூரியில் மது அருந்தியதை தட்டிக்கேட்ட மாணவர்களுக்கு கொலைமிரட்டல் விடுத்த நபர்களை போலீசார் கைது செய்தனர்.
துவாக்குடி அரசு கலை கல்லூரியில் அத்துமீறி நுழைந்த 3 பேர் மது அருந்திக்கொண்டிருந்தனர். இதனை கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் தட்டிக் கேட்டனர்.
இதனால் ஆத்திரமடைந்த 3 பேரும் மாணவர்களை ஆபாசமாக பேசியதுடன் கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், 3 பேரையும் கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.